உள்ளூர் செய்திகள்
கட்டுமானம் சிறக்க ஒவ்வொரு முயற்சியும் மாறுபட்டதாக இருக்க வேண்டும் - எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சு
- ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயர்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருப்பூரில் நடந்தது.
- விஸ்வகர்மா தேவசிற்பியாகவும், மயன் அசுர சிற்பியாகவும் இருந்தனர்.
திருப்பூர் :
ஸ்ட்ரக்சுரல் என்ஜினீயர்ஸ் அசோசியேஷன் தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா திருப்பூரில் நடந்தது. இதில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசியதாவது :- கட்டுமானத்தை பொறுத்தவரை விஸ்வகர்மா தேவசிற்பியாகவும், மயன் அசுர சிற்பியாகவும் இருந்தனர். விஸ்வகர்மா எழுப்பிய கட்டுமானம், காலத்தால் அழியாமல் இருக்கிறது. அயனின் கட்டுமானம் காலத்திற்குள் அழிந்துவிட்டது. அசுரர் என்றால் கொடியவர்கள் அல்ல, தேவர்களுக்கு எதிரானவர்கள் மட்டுமே.
ஓவ்வொரு முறையும் புதிய தொழில்நுட்பத்துக்கு சென்று வென்று, அடுத்தகட்டத்துக்கு உயர வேண்டும். கட்டுமானம் சிறக்க, ஒவ்வொரு முயற்சியும் மாறுபட்டதாகவும், சிந்தனையின் வெளிப்பாடாகவும் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.