சுல்தான்பேட்டையில் இலவச மருத்துவ முகாம்
- கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் திருப்பூர் வட்டார அளவிலான தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
- முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.
மங்கலம்,அக்.2-
திருப்பூர் மாவட்டம்-மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் திருப்பூர் வட்டார அளவிலான தமிழக அரசின் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இலவச சிறப்பு மருத்துவ முகாமானது சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.முகாமிற்கு திருப்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். நித்யா முருகேசன் தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி இலவச சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வகித்தார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர், திமுக., கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தம்பணன், திருப்பூர் ஒன்றிய குழு தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியண்ட்மணி, பெருமாநல்லூர் வட்டார மேற்பார்வையாளர் வரதராசன், மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர்.சங்கவி, மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் முகமது இத்ரீஸ், ராதாநந்தகுமார், பால்ராஜ் மற்றும் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாமில் மருத்துவ குழுவினர் இருதய நோய் , சர்க்கரை நோய், தோல் நோய், காசநோய், கண் நோய்,பொது மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், மகப்பேறு மருத்துவம் உள்ளிட்டவற்றிற்கு சிகிச்சை அளித்து மருந்து, மாத்திரைகளை வழங்கினார்கள்.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றனர்.