மங்கலம் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம்
- பயனாளிகளுக்கு கண், நுரையீரல், புற்றுநோய், இருதயநோய், சிறுநீரக பாதிப்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
- உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
மங்கலம் :
மங்கலம் பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் மங்கலம் ஊராட்சி நிர்வாகம், அபிராமி மருத்துவமனை கோவை, ஈரோடு கேன்சர் சென்டர், திருப்பூர் நுரையீரல் மருத்துவமனை, நம்பிக்கை நமது அமைப்பு, திருப்பூர் ஐ பவுண்டேசன் சார்பில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி- தலைமை தாங்கினார். மங்கலம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தாஹாநசீர் அனைவரையும் வரவேற்றார்.திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகி எபிசியன்ட் மணி, தமிழ்நாடு மருத்துவ சேவை மையம் நிறுவனர் ரஹீம்அங்குராஜ் ஆகியோர் இந்த முகாமிற்கு முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் இத்ரீஸ், அர்ஜீனன், ரபிதீன் எஸ்.டி.பி.ஐ-கட்சியைச் சேர்ந்த அபுதாஹிர், த.மு.மு.க நிஷாத், மங்கலம் திமுக இளைஞரணியைச் சேர்ந்த சரவணகுமார், ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு கண் சம்மந்தப்பட்ட நோய், நுரையீரல் நோய், புற்றுநோய், இருதயநோய், சிறுநீரக பாதிப்பு, எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு தமிழக அரசின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இம்முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.