உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம்.

ஆலய புனரமைப்பு நிதி அளிப்பது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது - இந்து முன்னணி அறிக்கை

Published On 2023-04-20 07:55 GMT   |   Update On 2023-04-20 07:55 GMT
  • கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டுகோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர்.
  • தமிழகத்தில் தி.மு.க.,வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது.

திருப்பூர் :

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு முதல் தமிழகத்தின் மாவட்ட கலெக்டர்கள், கிறிஸ்துவ சர்ச், ஜெப கூடங்களை புனரமைக்க விண்ணப்பிக்கும் வேண்டு கோளை அறிக்கையாக அளித்து வருகின்றனர். மதசார்பற்ற அரசு, மக்களின் வரி பணத்தை மத வழிபாட்டு தலங்கள் சீரமைப்பு நிதியாக அளிப்பது கூடாது.

இந்துகோவில்களை அரசு, தனது அதிகாரம் எனும் இரும்பு பிடிக்குள் வைத்து ஆட்டிப்ப டைத்து வருகிறது. பல்லாயிரம் கோவில்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருந்தும் ஒரு கால பூஜை கூட இல்லாத நிலை இருக்கிறது.ஆனால் தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில், கோவில்களை சீரமைக்க அளிப்பதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் இதுவரை ஒன்றும் செய்யவில்லை. சர்ச்சுகளுக்கு மக்கள் வரிப்பணத்தை வாரி இறைக்க காரணம் கிறிஸ்துவ ஓட்டு வங்கி தான். தமிழகத்தில் தி.மு.க., வின் ஆட்சி வந்த பின் கிறிஸ்துவர்களின் மதமாற்றம் தலைவிரித்தாடுகிறது. சர்ச் புனரமைப்பு நிதி தருவது அரசியல் சாசன சட்டத்துக்கு புறம்பானது. இந்த அறிவிப்பை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்,

Tags:    

Similar News