உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

கியாஸ் சிலிண்டர் பதிவு செய்ய - நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை தொடக்கம்

Published On 2023-08-25 06:32 GMT   |   Update On 2023-08-25 06:32 GMT
  • தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.
  • சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

திருப்பூர்:

இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு வாடிக்கையாளர் உள்ளனர். தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர் வினியோகம் செய்யப் படுகிறது.

இந்தியன் ஆயிலின் கட்டணமில்லா தொலைபேசி எண், இணையதளம், மிஸ்டு கால், வாட்ஸ் ஆப் எண் ஆகியவற்றின் வாயிலாக சமையல் கியாஸ் சிலிண்டருக்கு முன்பதிவு செய்யலாம். வாடிக்கையாளர்கள் சில நேரங்களில், வேலை நிமித்தம் காரணமாக, சிலிண்டர் முன்பதிவு செய்ய மறந்து விடுகின்றனர். இதனால் சிலிண்டர் தீர்ந்து விடும் சமயத்தில் சமைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இதை தவிர்க்க தற்போது, சிலிண்டர் பதிவு செய்வது குறித்து நினைவூட்டல் எஸ்.எம்.எஸ்., அனுப்பும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

அந்த எஸ்.எம்.எஸ்.,-ல் கடைசி சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்ட தேதி மற்றும் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டிய மிஸ்டு கால் எண், இணையதள, 'லிங்க்' ஆகியவையும் அனுப்பப்படுகிறது.

Tags:    

Similar News