உள்ளூர் செய்திகள்

கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவிகளை படத்தில் காணலாம்.

கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-08-19 07:27 GMT   |   Update On 2022-08-19 07:27 GMT
  • தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
  • 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

பல்லடம் :

பல்லடத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்றனர்.இதுகுறித்து கராத்தே பயிற்சியாளர் சரவணன் கூறியதாவது:-

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்,கோஜிரியோ கராத்தே அமைப்பின் சார்பில், தேசிய கராத்தே போட்டிகள் நடைபெற்றது.இந்தப் போட்டிகளில் தமிழகம், ஆந்திரா,கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கட்டா,குமிட்டோ,உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 8 தங்கப்பதக்கம்,10 வெள்ளிப்பதக்கம், 16 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கன்சன் இந்தியா ட்ரஸ்ட் மேலாளர் சதிஷ்குமார், கராத்தே பயிற்சியாளர் சரவணன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள் உள்பட பலர் மாணவ மாணவிகளை வாழ்த்தினர்.

Tags:    

Similar News