அறிவியல் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல் - புதிய கண்டுபிடிப்புகளை காட்சிக்கு வைத்தனர்
- தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
- விளையாட்டு போட்டிகள் நடந்தது.
திருப்பூர் :
திருப்பூர், தென்னம்பா ளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மகளிர் தின விழா, அறிவியல் கண்காட்சி, சிறுதானிய உணவுத்திருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி வரவேற்றார். தெற்கு வட்டார கல்வி அலுவலர் ஐஸ்டின்ராஜ் தலைமை வகித்தார். தானியங்களால் தயாரி க்கப்பட்ட உணவுகளை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியர் வீடுகளில் தயார் செய்து உணவுத்திருவிழாவுக்கு எடுத்து வந்திருந்தனர். அறிவியல் கண்காட்சியில் பெட்ரோல் பங்க் செயல்பாடு, வேக்குவம் கிளீனர், கடற்கரை லைட்ஹவுஸ், எரிமலை, நீர்சுத்திகரிப்பான், சிறுநீரகம், இதயம் செயல்பாடு, வீடுகளின் வகைகள், காலநிலை மாற்றம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தங்கள் படைப்புகளை ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியைகள் பங்கேற்று மகளிர் தின விழா, விளையாட்டு போட்டிகள் நடந்தது. மாவட்ட அளவில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.