உள்ளூர் செய்திகள்

குரூப்-2 முதல்நிலை தேர்ச்சி பெற்றவர்கள் இ-சேவை மையங்களில் மூலச்சான்றிதழை பதிவேற்றம் செய்ய வசதி

Published On 2022-12-03 07:38 GMT   |   Update On 2022-12-03 07:38 GMT
  • தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு நடந்து வருகிறது.
  • அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

திருப்பூர் :

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழை இணையதளம் மூலமாக வருகிற 15-ந் தேதி வரை தமிழ்நாடு அரசு இ-சேவை மையங்கள் மூலமாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டு நடந்து வருகிறது.

மூலச்சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க விண்ணப்பதாரர்கள் அனைவரும் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வசதியாக வருகிற 16-ந் தேதி வரை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து இ-சேவை மையங்களில் பதிவேற்றம் செய்யலாம். இந்த மையங்கள் தினமும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News