உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

அபராதம் ரத்தால் மகிழ்ச்சி - நிலுவை மின் கட்டணத்தை செலுத்துவதில் விசைத்தறியாளர்கள் ஆர்வம்

Published On 2023-09-13 06:53 GMT   |   Update On 2023-09-13 06:53 GMT
  • முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது.
  • 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது.

திருப்பூர்:

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. பல லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மின் கட்டணத்தை செலுத்தாமல் விசைத்தறியாளர்கள் போராடினர்.

அதன் பலனாக முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது. ஆனால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்பட்டது.மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலேயே மின் கணக்கீடு செய்யப்பட்டது. இதனால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

கடந்த 8 மாதங்களாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் நிலுவை மின் கட்டணத்துக்கு அபராதம், வட்டியை ரத்து செய்ய வேண்டும், கட்டணம் செலுத்த தவணை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்தும், 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் நிலுவை மின் கட்டணத்தை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் கூறுகையில், அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

கடந்த 4 நாட்களாக மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று தங்களின் நிலுவை கட்டணம் குறித்து விசாரித்து அதை செலுத்துவதில் விசைத்தறியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றனர்.

Tags:    

Similar News