உள்ளூர் செய்திகள்
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
- அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
- உதவி வேளாண்மை அலுவலர் சின்னராஜ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு சிறப்புரை ஆற்றினார்.
அவிநாசி :
அவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் ஊராட்சி, வெள்ளாண்டிபாளையத்தில் வேளாண்மைத்துறை சார்பில், 2022-23ம் ஆண்டிற்கான அட்மா திட்டத்தின் மூலம் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் தோட்டத்தில் தேன் பூச்சி பெட்டி வைத்து வளர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
உதவி வேளாண்மை அலுவலர் சின்னராஜ் வரவேற்றார். வேளாண்மை உதவி இயக்குநர் அருள்வடிவு சிறப்புரை ஆற்றினார். தேனீ வளர்ப்பாளர் சதீஷ்குமார் செயல் விளக்கம் காண்பித்தார். மேலும் தேனீ வளர்ப்பினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து உதவி வேளாண்மை அலுவலர் வினேத்குமார், வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண்மை அலுவலர் சுஜி ஆகியோர் பேசினர். அட்மா திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார். இப்பயிற்சியில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.