உள்ளூர் செய்திகள்

 வரன்முறை அனுமதி வழங்கப்பட்ட காட்சி.

கரைப்புதூர் ஊராட்சியில் வீட்டுமனை வரன் முறைப்படுத்துதல் சிறப்பு முகாம்

Published On 2022-08-19 07:07 GMT   |   Update On 2022-08-19 07:07 GMT
  • 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.
  • 120 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கிராம ஊராட்சிகளான கணபதிபாளையம்,கரைப்புதூர் ஊராட்சிகளில்,கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட தனிமனைகளை வரன்முறைப்படுத்தல் சிறப்பு முகாம் கணபதிபாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 120 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன்,கணபதி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம், பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் பாலசுப்ரமணியம், கரைப்புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், ஒன்றிய கவுன்சிலர் ஆர்.ஆர்.ரவி, கணபதி பாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார், மற்றும் ஊராட்சி செயலாளர்கள், கணபதிபாளையம் பிரபு சங்கர், கரைப்புதூர் காந்திராஜ், வார்டு மெம்பர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News