உள்ளூர் செய்திகள்

அவினாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்ற காட்சி.

மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் இணைப்பை துண்டிக்க வேண்டும் - கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

Published On 2022-07-30 04:33 GMT   |   Update On 2022-07-30 04:33 GMT
  • அவினாசிபழைய பஸ் நிலையம் பின்புறம் தனியார் தோட்டத்திற்கு மண்ணை விற்றதாக புகார் எழுந்துள்ளது.
  • குடம் வைத்துதான் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

அவனாசி :

அவினாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் பொ. தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

திருமுருகநாதன்(11- வது வார்டு)

அவினாசிபழைய பஸ் நிலையம் பின்புறம் தனியார் தோட்டத்திற்கு பேரூராட்சிக்கு சொந்தமான மண்ணை விற்றதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் தரவேண்டும் என்றார். இதே கருத்தை சரவணகுமார்( வார்டு 4), தேவி (10), சாந்தி (12), ஸ்ரீதேவி (18) உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தலைவர்: மண்கொட்டுவதற்கு இடம் இல்லாததால் அங்கு கொட்டப்பட்டது. தேவைப்படும்போது மண் எடுத்து கொள்ளலாம் என்றார்.

ரமணி (17 -வது வார்டு):

பேரூராட்சியில் பல இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைககாமல் அவதிக்குள்ளாகின்றனர். மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்களுக்கு குடிநீர் சப்ளையை துண்டிக்க வேண்டும். 18 வார்டுகளிலும் பெரிய நிறுவனங்கள் உள்பட அனைவரும் டியூப் போட்டு பிடிக்கின்றனர். அத்துடன் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை கழுவுதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து குடம் வைத்துதான் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

தேவி (18வது வார்டு): எங்கள் பகுதியில் சாக்கடை சரிவர எடுக்காமல் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இது பற்றி பல முறை சொல்லியும் சாக்கடை கால்வாய்சுத்தம் செய்வதில்லை. சொந்த செலவில் எங்கள் பகுதி யை சாக்கடை சுத்தம் செய்து வருகிறோம். இனியாவது ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து தரவேண்டும் என்றார்.

கருணாம்பாள் (8 -வது வார்டு): வள்ளுவர் வீதியில்உள்ள வேப்பமரத்தின் மீது அடிக்கடி லாரி மோதி மரம் சாய்ந்துவிடும் நிலையில் உள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்துஅவினாசி பழைய பஸ் நிலையம் பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக பேரூராட்சி நிர்வாகத்தினர் மண் பயன்படுத்தப்பட்டது பற்றி கேட்டதற்கு ஒரு வாரத்திற்குள் மண்ணை எடுப்பதாக உறுதிகூறியுள்ளனர். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் பேரூராட்சி மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க.,காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர் (பொறுப்பு) தனலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.

Tags:    

Similar News