வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்
- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன.
- புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களில் 60 வார்டு பகுதிகள் உள்ளன. வீடுகளில் தேங்கிக் கிடக்கும் குப்பை, சாக்கடை கழிவு நீர் கால்வாய் மற்றும் கழிவுகள் தேங்கியுள்ள பகுதிகள், செடிகள் நிறைந்த புதர் பகுதி உள்ளிட்ட திறந்த வெளிப் பகுதிகளில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன.
இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக, மாநகராட்சி சுகாதார பிரிவினர் கொசு மருந்து புகை அடித்தல் மற்றும் கொசு புழுஒழிப்பு மருந்து தெளித்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிக்கு மண்டலவாரியாக, புகை அடிக்கும் இயந்திரம் பொருத்தப்பட்ட தலா ஒரு வாகனம் வழங்கப்பட்டுள்ளது. புகை அடிக்கும் கருவிகள், 33 தற்போது பயன்பாட்டில் உள்ளன.சுகாதார பிரிவினர் கூறுகையில், 'வழக்கம் போல் சுழற்சி முறையில் பகுதிவாரியாக புகை மருந்து அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி சுகாதார ஊழியர்கள் பணியாற்றுகின்றனர் என்றனர்.