ஆயத்த ஆடை உற்பத்தியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற பாலிெயஸ்டருக்கு தனி வாரியம்
- பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு.
- பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூரை சேர்ந்த வால்ரஸ் நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக பாலியஸ்டர் துணிகளை விற்பனை செய்து வருவதுடன், தற்போது குழந்தைகள், பெண்கள், ஆண்களுக்கான பாலிெயஸ்டர் ரெடிமேட் ஆடைகளை தயாரித்து குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பூர் பின்னலாடை தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க வேண்டும் என்ற கருத்தை திருப்பூர் வால்ரஸ் நிறுவனம் முன்வைத்துள்ளது.
இதுதொடர்பாக திருப்பூர் தொழில்துறை சார்பில் வால்ரஸ் நிறுவனத்தலைவர் ஜிபிஎஸ். டேவிட் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. க.செல்வராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார். அப்போது தி.மு.க.பகுதி செயலாளர்கள் போலார் சம்பத்குமார், உசேன் ஆகியோர் உடனிருந்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- ஆயத்த ஆடை தொழிலுக்கு தமிழகத்தில் செயற்கை இழை துணி வகை (பாலிெயஸ்டர் பேப்ரிக்) முன்னேற்றத்திற்கு தனி வாரியம் என்று இதுவரை அரசால் ஏற்படுத்தப்படவில்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை திருப்பூர் தொழில்துறையினர் சார்பில் வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் சார்பில் முன் வைக்கிறோம்.
பருத்தி நூலிழை ஆடைகளை விட பாலிெயஸ்டர் ஆடைகளின் உற்பத்தி செலவு பல மடங்கு குறைவு. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூரில் பாலிெயஸ்டர் ஆடைகளின் பங்களிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது உலக அளவில் பாலிெயஸ்டர் ஆடைகளின் தேவைகள் அதிகரித்துள்ளது. எனவேதான் தற்போது தொழில்துறையினரில் பெரும்பாலானோர் பாலிெயஸ்டரில் இறங்கி உள்ளனர். வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் நிறுவனம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தி புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க திட்டமிட்டு, செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமின்றி பாலிெயஸ்டர் துணி மற்றும் ஆடை ரகங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிதாக பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றவும், திருப்பூரை தமிழகத்தின் முதன்மை நகரமாக மாற்றவும் பாலிெயஸ்டருக்கென தனி வாரியம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் எம்.பி. சுப்பராயன், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோரிடமும் மனு கொடுக்க இருப்பதாக வால்ரஸ் டேவிட் தெரிவித்தார்.