உள்ளூர் செய்திகள்

ஸ்ரீகருணாம்பிகை அம்மன்.

அவினாசி கோவில்களில் கார்த்திகை அமாவாசை சிறப்பு வழிபாடு

Published On 2022-11-24 05:47 GMT   |   Update On 2022-11-24 08:10 GMT
  • வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
  • சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அவினாசி :

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. நேற்று கார்த்திகை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஸ்ரீகருணாம்பிகை அம்மன்- அவினாசியப்பர்சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

அவினாசியிலுள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், அவினாசி ரங்கா நகரிலுள்ளவனபத்திரகாளியம்மன்கோவில், நடுவச்சேரி சிவளபுரியம்மன் கோவில், ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News