பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவ பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா
- நேர்மையாக வாக்களிப்பது முறையினை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
- குழுக்களின் தலைவர் மற்றும் துணை தலைவர்கள் பதவியேற்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாணவர்கள் அனைவரும் கணினி வாயிலாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதன் மூலம் தங்களுடைய வாக்கின் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் எவ்வாறு நேர்மையாக வாக்களிப்பது என்ற முறையினையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாணவ பேரவையின் மாணவ தலைவராக 12-ம்வகுப்பு மாணவர் பிரதோஷ் மற்றும் மாணவ தலைவியாக 12-ம்வகுப்பு மாணவி அருந்ததி ஆகியோர் பதவியேற்றனர்.
நிகழ்ச்சியில் ஹெர்குலிஸ், ஒரையன், லைரா, பெகாசிஸ் ஆகிய குழுக்களின் தலைவர் மற்றும்துணை தலைவர்கள் பதவியேற்றனர். மேலும் பிரஸ் கிளப், கல்ச்சுரல் கிளப், மேட் சயின்ஸ் கிளப், மேஜிக்கல் மேக்ஸ், டெக்னோ கிளப், நேச்சர் கிளப் ஆகிய கிளப்களுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர்களும் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் மொத்தமாக 27 மாணவ, மாணவிகள் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
விழாவில் பள்ளி முதல்வர் லாவண்யா, துணை முதல்வர்,தலைமையாசிரியை, ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர். பள்ளியின் இயக்குனர் - செயலாளர் பேசுகையில் , தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழுமாறு அறிவுரை வழங்கினார்.