பல்லடம் பஸ் நிலையத்தில் போதை ஆசாமிகள் தொல்லை அதிகரிப்பு
- தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
- குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.விசைத்தறி மற்றும் கறிக்கோழி உற்பத்தி உள்ளிட்ட தொழில்கள் வளர்ச்சி காரணமாக, மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் குடிமகன்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குடித்துவிட்டு போதையில் பயணிகள் அமரும் இட ங்களில் அலங்கோலமாக படுத்து விடுகின்றனர். மேலும் தகாத வார்த்தை களில் கத்திக்கொண்டு இருப்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பெண் பயணிகள் அச்சம் அடைகின்றனர். எனவே போலீசார் பஸ் நிலையத்தில் அடிக்கடி ரோந்து பணிகளை மேற்கொண்டு நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.