உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று நோய் பரிசோதனை செய்யும் காட்சி.

ஆனைமலை மலை கிராமத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று நோய் பரிசோதனை

Published On 2023-09-18 10:34 GMT   |   Update On 2023-09-18 10:34 GMT
  • மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள்.
  • மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

உடுமலை,

உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் அமராவதி மற்றும் உடுமலை வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக எரிசினம்பட்டி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட மாவடப்பு, காட்டுப்பட்டி, குளிப்பட்டி, குருமலை ஆகிய மலைவாழ் குடியிருப்புகளில் சுகாதார முகாம் நடைபெற்றது.

டாக்டர்.பூபதி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் அடங்கிய குழுவினர் மிஷன் இந்திர தனுஷ் 5.0 திட்டத்தின் கீழ் 17 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு தொற்று நோய் பரிசோதனை செய்யப்பட்டு 109 நபர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதனால் மலைவாழ் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

Similar News