வேளாண், உழவர் நலத்துறை திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு
- புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
- துறை சார்ந்த திட்டங்களில் பயன் பெறுவதற்காக தங்களுடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை.
குண்டடம் :
தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் பயன் பெற வேளாண் அடுக்கு திட்டமானது தமிழ்நாடு அரசு - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள (GROWER ONLINE REGISTRATION OF AGRICULTURAL INPUT SYSTEM) என்ற புதிய இணையதள சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையதளத்தில் பதிவு செய்வதற்காக விவசாயிகள் தங்களின் நில உடமை விவரம், ஆதார் கார்டு நகல், ரேஷன் கார்டு நகல், வங்கி விபரம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மற்றும் தங்கள் செல்போன் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் குண்டடம் வட்டார தோட்டக்கலை வேளாண்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கிரைன்ஸ் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு ஒவ்வொரு முறையும் மத்திய மற்றும் மாநில துறை சார்ந்த திட்டங்களில் பயன் பெறுவதற்காக தங்களுடைய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது இல்லை. விவசாயிகள் முன்னுரிமை அடிப்படையில் அரசின் திட்டங்களை பயன்படுத்துவதுடன் இதுவரை தாங்கள் அரசிடம் இருந்து பெற்ற திட்டத்தின் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
எனவே திட்டத்தின் முக்கியத்துவத்தினை உணர்ந்து விவசாயிகள் தவறாமல் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெற வலியுறுத்தப்படுகிறது. இந்த தகவலை குண்டடம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சசிகலா தெரிவித்துள்ளார். மேலும் இத்திட்டம் தொடர்பான விபரங்களுக்கு 9514034056, 9488928722 ஆகிய செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.