உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் - கலெக்டரிடம் ஈ.பி.சரவணன் மனு

Published On 2023-08-27 06:51 GMT   |   Update On 2023-08-27 06:51 GMT
  • சாலையோர வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் வழங்குவதற்கான மனுக்கள் கொடுக்கப்பட்டன.
  • குளறுபடிகளை சரி செய்து தகுதி உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு காலதாமதம் இன்றி துரிதமாக கடன் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

திருப்பூர்:

திருப்பூர் பொது தொழிலாளர் அமைப்பின் பொது செயலாளர் ஈ.பி.சரவணன் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கடன் வழங்குவதற்கான மனுக்கள் பெறப்பட்டதில் பல குளறுபடிகள் உள்ளதாக வியாபாரிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். எனவே சாலையோர வியாபாரிகள் கடன் பெற பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆவணங்களையும், விளக்கத்தையும், மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படையாக கூறி குறைகளை நிவர்த்தி செய்து குளறுபடிகளை சரி செய்து தகுதி உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு காலதாமதம் இன்றி துரிதமாக கடன் வழங்குவதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News