உள்ளூர் செய்திகள் (District)

வெற்றி பெற்ற சாரண சாரணியர்களை பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி,பொருளாளர் மோகனசுந்தரம், முதல்வர் சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கிய காட்சி.

சாரண விழா போட்டியில் ஜேசீஸ் பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-11-04 06:02 GMT   |   Update On 2022-11-04 06:02 GMT
  • 300 சாரணர், 300 சாரணியர்கள், 60 ஆசிரியர்கள், 40தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
  • கேம்புரி முகாம் குன்னூர், ஸ்டேன்லி பார்க் மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

காங்கயம் :

 பாரத சாரண சாரணியர் இயக்கம் தமிழ்நாடு சார்பில் மண்டல அளவிலான கேம்புரி முகாம் குன்னூர், ஸ்டேன்லி பார்க் மாநில பயிற்சி மையத்தில் நடைபெற்றது.  இம்முகாமில் கரூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரிஎன ஐந்து மாவட்டங்களில் இருந்து 300 சாரணர், 300 சாரணியர்கள், 60 ஆசிரியர்கள், 40தன்னார்வலர்கள் பங்கேற்றனர். காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் பள்ளியின் சார்பில் 4 சாரணர்களும், 5சாரணியர்களும், சாரண ஆசிரியர் பொன்சங்கர்  கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி சாரணசாரணியர்கள் கண்காட்சி மற்றும் கயிற்றுக்கலையில் முதலிடமும், இசைக்குழுஅணிவகுப்பு, படை அணிவகுப்பு, கிராமிய உணவுத் திருவிழா, கலாச்சார உடைஅணிவகுப்பு, மற்றும் கிராமிய நடனம் ஆகிய போட்டியில் இரண்டாம் இடமும் பெற்றுஒட்டுமொத்த புள்ளி பட்டியலில் மாநில அளவில் இரண்டாம் இடத்தை பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தனர்.

வெற்றி பெற்ற சாரண சாரணியர்களை பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி,பொருளாளர் மோகனசுந்தரம், முதல்வர் சுப்பிரமணி ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர். மேலும் பள்ளியின் தலைவர் கோபால்,  அகடமிக் டைரக்டர்சாவித்திரி சுப்பிரமணியம் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் பாராட்டுதெரிவித்தனர்.

Tags:    

Similar News