காங்கயம் நகராட்சி பகுதி கடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - ஆணையர் அறிவிப்பு
- சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன
- தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும்
காங்கயம்,அக்.2-
காங்கயம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கனிராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை சாலை பகுதியில் செயல்பட்டு வரும் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் சாலையின் மையப்பகுதி வரை தட்டிகள், விளம்பர பதாகைகள் வைத்து நீட்டிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களிடமிருந்து தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. நேரடி ஆய்வின்போது, கடைகள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறி நீட்டித்து வைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் தங்களது கடைகளுக்கு முன்புறம் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாவே அகற்றி கொள்ள வேண்டும்.
தவறும் பட்சத்தில் நகராட்சியால் அப்புறப்படுத்தப்படுவதுடன், தங்களது குத்தகை உரிமமும் ரத்து செய்யப்படும். மேலும் அபராத தொகையும் வசூலிக்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.