உள்ளூர் செய்திகள்

கல்லூரி மாணவர்கள் ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்திய காட்சி.

கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி

Published On 2022-07-26 11:50 GMT   |   Update On 2022-07-26 11:50 GMT
  • 1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது.
  • போர் முடிவடைந்த போதிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.

திருப்பூர் :

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக இன்று கல்லூரி வளாகத்தில் கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பேசுகையில் , 1999 ஆம் ஆண்டில் கார்கில் போர் 60 நாட்களுக்கு மேலாக நடந்தது. ஜூலை 26 ம் நாளன்று இப் போர் முடிவடைந்த போதிலும் ஏராளமான ராணுவ வீரர்கள் உயிர் நீத்தனர்.

உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அவர்கள் குடும்பம் நன்றாக வாழ்ந்திட கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது என்றார்.

நிகழ்ச்சியில் மாணவ செயலர்கள் அருள்குமார் , சுந்தரம் , பூபதிராஜா தலைமையில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News