உள்ளூர் செய்திகள்

முகாமை சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி பார்வையிட்ட காட்சி. 

சாமளாபுரம் பேரூராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வருகிற 31-ந் தேதி வரை நடக்கிறது

Published On 2023-03-03 07:47 GMT   |   Update On 2023-03-03 07:47 GMT
  • கள்ளப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.
  • கால்நடை வளர்ப்போர் மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி 12-வது வார்டு கள்ளப்பாளையம் பகுதியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி முன்னிலை வகித்தார். முகாமில் சாமளாபுரம் பேரூராட்சி மன்றதுணைத்தலைவர் குட்டிவரதராஜன்,சாமளாபுரம் பேரூராட்சி 12-வது வார்டு கவுன்சிலர் பிரியாசெந்தில் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இம்முகாமில் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் பிரியலட்சுமி, இச்சிப்பட்டி கால்நடை ஆய்வாளர் சத்யா, கால்நடை ஆய்வாளர் காயத்ரி உள்ளிட்ட மருத்துவக்குழுவினர் கள்ளப்பாளையம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.

வருகிற 31-ந்தேதி வரை சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம், செந்தேவிபாளையம், சாமளாபுரம், பள்ளபாளையம், காளிபாளையம்,வி.அய்யம்பாளையம், பரமசிவம்பாளையம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கோமாரிநோய் தடுப்பூசிமுகாம் நடைபெறவுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை(திருப்பூர்) கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், வருகிற 31-ந்தேதி வரை சாமளாபுரம் பேரூராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.ஆகவே சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் கால்நடை வளர்ப்போர் தங்களுடைய மாடுகளுக்கு கோமாரிநோய் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றனர். 

Tags:    

Similar News