உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

தென்மண்டல அளவிலான தடகள போட்டியில் சிறப்பிடம் பிடித்த திருப்பூா் வீரா்களுக்கு பாராட்டு

Published On 2023-10-21 10:24 GMT   |   Update On 2023-10-21 10:24 GMT
  • தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.
  • தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றது.

 திருப்பூர்:

தெலுங்கானா மாநிலத்தில் 34-வது தென் மண்டல அளவிலான ஜூனியா் தடகள சேம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் தென் மண்டலங்களைச் சோ்ந்த ஆந்திரம், கா்நாடகம், கேரளம், லட்சத்தீவு, புதுச்சேரி, தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த தடகள வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் சுமாா் 2,000 போ் கலந்து கொண்டனா்.

இதில் 14, 16, 18, 20 வயதுக்கு உள்பட்டோா் என நான்கு பிரிவுகளாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழக அணியில் திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த 5 வீரா்கள், 5 வீராங்கனைகள் என மொத்தம் 10 போ் பங்கேற்றனா். இதில் 3 தங்கம், 4 வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கம் பெற்றனா். மேலும் சிறந்த தடகள வீரா்களாகவும் தோ்ந்தெடுக்க ப்பட்டனா்.

இதில் தமிழக அணியினா் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும், அனைத்துப் பிரிவிலும் சிறந்த வீரா், வீராங்கனை பட்டமும் வென்றுள்ளனா்.

போட்டியில் வெற்றி பெற்ற திருப்பூா் மாவட்ட வீரா்கள், வீராங்கனைகளுக்கு, திருப்பூா் தடகள சங்கத்தின் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் முத்துகுமாா், மூத்த துணைத் தலைவா் மோகன் காா்த்திக், துணைத் தலைவா்கள் வெங்கடேஷ், சந்தீப்குமாா், ஜெயபிரகாஷ், மதிவாணன், இணைச் செயலாளா்கள் நிரஞ்சன், அழகேசன், ராமகிருஷ்ணன், தொழில்நுட்பக்குழுத் தலைவா் மனோகா் செந்தூா்பாண்டி, துணைத் தலைவா் சஜீவ் தாமஸ் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தனா் 

Tags:    

Similar News