சிறுவர்களை மிரட்டி ஓரினசேர்க்கையில் ஈடுபட முயன்ற தொழிலாளி போக்சோவில் கைது
- பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார்.
- தந்தை உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உடுமலை :
மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூரைச் சேர்ந்த அப்பு குட்டி என்கின்ற ஈஸ்வரன்( வயது 35).இவர் குமரலிங்கத்தில் குடியிருந்து கொண்டு கூலிவேலை செய்து வருகிறார்.ஈஸ்வரன் நேற்று முன் தினம் வழக்கம்போல் அமராவதி பகுதிக்கு கூலிவேலைக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது கல்லாபுரத்தைச் சேர்ந்த 13 மற்றும் 8 வயது மதிக்கத்தக்க இரண்டு சிறுவர்கள் (அண்ணண்,தம்பி) அவர்களது வயலுக்கு சென்று விட்டு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.அந்த வழியாக வந்த ஈஸ்வரன் இரண்டு சிறுவர்களிடம் நைசாக பேச்சு கொடுத்து உள்ளார்.மேலும் அவர்கள் இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறி மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அமராவதி முதலைப் பண்ணைக்கு அருகே உள்ள சுடுகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று உள்ளார்.
பின்னர் அவர்கள் இருவரையும் ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி அடித்ததுடன் பாலியல் தொந்தரவுக்கும் உட்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாகவும் சிறுவர்களை மிரட்டி உள்ளார். தங்களுக்கு நேர்ந்த கொடுமையை இரண்டு சிறுவர்களும் நேற்று முன்தினம் இரவு பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களது தந்தை உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஈஸ்வரனை கைது செய்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.சிறுவர்களை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கல்லாபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.