உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

பெண் குழந்தைகள் நலன் பாதுகாக்க சட்ட விழிப்புணர்வு முகாம்

Published On 2023-08-30 06:41 GMT   |   Update On 2023-08-30 06:41 GMT
  • கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது
  • மூன்றாம் பாலினத்தவர் குறித்த சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

திருப்பூர் : 

திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் திருப்பூர் கருப்பகவுண்டன்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மூன்றாம் பாலினத்தவர் குறித்த சட்டம் குறித்து விளக்கி கூறப்பட்டது.

கோர்ட்டு வக்கீல்கள் அருணாசலம், திங்களவள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரியாஷ்கான் ஆகியோர், பெண் குழந்தைகள் நலனுக்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் குறித்தும், மூன்றாம் பாலினத்தவரை சமுதாயத்தில் வேறுபாடின்றி நடத்த வேண்டும் என்பது குறித்தும், பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறி னார்கள். முடிவில் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் நந்தகோபால் நன்றி கூறினார். இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News