உள்ளூர் செய்திகள்

சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் நேரில் ஆய்வு செய்து காட்சி.

பல்லடம் அருகே சிறுத்தை நடமாட்டம்? - வனத்துறையினர் ஆய்வு

Published On 2023-07-17 06:51 GMT   |   Update On 2023-07-17 06:51 GMT
  • தங்காய்புதூர், மீனாட்சி வலசு மற்றும் சின்னாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • அந்தப் பகுதியில் அதிகளவில் மான்கள் நடமாட்டம் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள கண்டியன்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட தங்காய்புதூர், மீனாட்சி வலசு மற்றும் சின்னாரிப்பட்டி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் கோபால் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பகுதி முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அந்தப் பகுதியில் அதிகளவில் மான்கள் நடமாட்டம் இருப்பதாகவும், ஆனால் சிறுத்தை அந்த பகுதியில் இருப்பதற்கான கால் தடங்கலோ, வேறு எந்த அறிகுறியும் இல்லை என வனத்துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்ட பின் தெரிவித்தனர்.  

Tags:    

Similar News