உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு - தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை

Published On 2022-08-01 07:42 GMT   |   Update On 2022-08-01 07:42 GMT
  • திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர் உள்ளனர்.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகவும் இருக்கின்றனர்.

திருப்பூர் :

கடந்த ஜனவரி 5-ந்தேதி வெளியான வாக்காளர் பட்டியல் விவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் 23 லட்சத்து 89 ஆயிரத்து 614 வாக்காளர் உள்ளனர். ஆண்கள் - 11,76, 924, பெண்கள் -12, 12, 381, திருநங்கைகள்- 309 பேர் உள்ளனர்.ஏறத்தாழ 21 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர் நிறைந்த மாவட்டம் என்பதால் அடிக்கடி குடிபெயர்ந்து கொண்டே இருக்கின்றனர். வாடகை வீடு என்பதால் மாறிக்கொண்டே இருக்கின்றனர். அதன்படி, ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்காளராகவும் இருக்கின்றனர். தாங்களாக முன்வந்து பெயர் நீக்க விண்ணப்பித்தும் பெயர் நீக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்.பொது வினியோக திட்டத்தில் ஆதார் இணைக்கப்பட்டதும் போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டன.

அதேபோல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைத்தால் மட்டுமே செம்மையான பட்டியல் தயாரிக்க முடியும். தேர்தல் ஓட்டுப்பதிவு சதவீதமும், துல்லியமாக இருக்கும்.ஒருவழியாக, வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க இந்திய தேர்தல் கமிஷன் தயாராகிவிட்டது. இன்று முதல் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இப்பணி தொடர்ச்சியாக டிசம்பர் மாத இறுதி வரை நடக்க உள்ளது. அடுத்து வெளியாகும் வாக்காளர் இறுதி பட்டியல், ஆதார் விவரத்துடன் இணைந்ததாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடத்தி முறையாக அறிவிப்பு வெளியிட, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், படிவம் -6 பி பூர்த்தி செய்து, ஆதார் விவரங்களை இணைக்கலாம். ஆன்லைனில் இணைக்க முடியாதவர்கள் ஓட்டுச்சாவடி நிலை அலுவலரிடம் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைவில் அறிவிப்பு செய்யும் என்றனர்.

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் விவரத்தை இணைக்க தேர்தல் கமிஷன் வசதி செய்துள்ளது. 'ஆன்லைன்' மூலமாக படிவம் - 6பி' யை பூர்த்தி செய்து சமர்ப்பித்தாலே போதும். https://www.nvsp.in, voterhelpline - மொபைல் ஆப் வழியாக படிவம் - 6பி'யை பூர்த்தி செய்து எளிய முறையில் ஆதார் விவரத்தை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணி தொடர்பாக திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News