உள்ளூர் செய்திகள்
சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் -விவசாயிகளுக்கு வேளாண் பல்கலைக்கழகம் அறிவுரை
- கொப்பரையின் பண்ணை விலை கிலோ 75-80 ரூபாய் வரை இருக்கும்.
- தேங்காயின் பண்ணை விலை 12-14 ரூபாய் வரை இருக்கும்.
உடுமலை :
தமிழகத்தில் 35.07 லட்சம் டன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்தே தேங்காய் அதிக அளவில் கிடைக்கிறது.
தற்போது தேங்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், சந்தை மதிப்பு அறிய வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விலை முன்னறிவிப்புக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் தரமான தேங்காயின் பண்ணை விலை 12-14 ரூபாய் வரை இருக்கும் எனவும், கொப்பரையின் பண்ணை விலை கிலோ 75-80 ரூபாய் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.