உள்ளூர் செய்திகள்
மாரியம்மன் கோவில் திருவிழா - கோலாகலமாக காட்சியளிக்கும் உடுமலை
- தேர்த்திருவிழாவுக்கு மார்ச் 28-ந் தேதி நோன்பு சாட்டப்பட்டது.
- அம்பாள் ரிஷப வாகனத்தில், புஷ்ப அலங்காரத்துடன் வலம் வந்தார்.
உடுமலை :
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவி ழாவுக்கு மார்ச் 28-ந்தேதி நோன்பு சாட்டப்பட்டது. கடந்த 4ந்தேதி, கோவில் வளாகத்தில் திருக்கம்பம் நடப்பட்டது.நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது.அதன்படி நேற்று முன் தினம் அம்பாள் ரிஷப வாகனத்தில், புஷ்ப அலங்காரத்துடன் வலம் வந்தார். இன்றுடன் பூவோடு எடுத்தல் நிறைவு பெறுகிறது. வருகிற 12-ந்தேதி மாவிளக்கு எடுத்த லும் மாலை 3மணிக்கு அம்மன் திருக்க ல்யாணம் நடைபெ றுகிறது.உடுமலை நகர வீதிகள் அனைத்தும் விழாக்கோலத்தில், காட்சியளிக்கிறது. மக்கள் உற்சாகத்துடன் நிகழ்ச்சி களில் பங்கேற்று வருகின்ற னர்.