உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் 26-ந் தேதி தொடங்குகிறது

Published On 2022-08-24 04:55 GMT   |   Update On 2022-08-24 04:55 GMT
  • முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
  • மாற்றுத்திறனாளிகள் பல்வேறு திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வருகிற 26-ந் தேதி முதல் தொடங்குகிறது. அன்று வெள்ளகோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி தாராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. அடுத்த மாதம் 2-ந் தேதி குண்டடம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி குடிமங்கலத்தில் உள்ள பெதப்பம்பட்டி என்.வி. பாலிடெக்னிக் கல்லூரியிலும், 9-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24-ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் முகாம்கள் நடைபெற உள்ளது.

இந்த முகாம்கள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறாதவர்களுக்கு அட்டை வழங்குதல், மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை பதிவு செய்தல், பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் மானியம், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்றோர் நிதி உதவித்தொகை, மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், வீடு கட்டுவதற்கு கடனுதவி, முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டுக்கான உறுப்பினர் சேர்க்கை போன்ற திட்டங்களில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலுடன் 5 புகைப்படங்களை முகாமில் கொடுக்க வேண்டும். இதை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News