உள்ளூர் செய்திகள்

வால்பாறைக்கு நள்ளிரவில் இயக்கப்படும் ஆரசு பஸ்ஸை படத்தில் காணலாம்.

திருப்பூரில் இருந்து வால்பாறை நள்ளிரவு அரசு பஸ் சேவை தொடக்கம் - பயணிகள் மகிழ்ச்சி

Published On 2023-05-13 05:17 GMT   |   Update On 2023-05-14 05:05 GMT
  • இரவு 9 மணிக்கு சேலத்தில் பஸ் புறப்படும்.
  • இரவு 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு பஸ் இயங்கும்.

திருப்பூர் :

அரசு போக்குவரத்து கழக சார்பில், சேலம் - வால்பாறை இடையே பஸ் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இரவு, 9 மணிக்கு சேலத்தில் புறப்படும் பஸ், நள்ளிரவு திருப்பூர் வந்தடைத்து பின்னர் நள்ளிரவு திருப்பூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை, 4:20 மணிக்கு வால்பாறை சென்று சேருகிறது.

தற்போது, இரவு, 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு (பொள்ளாச்சி வழி) கடைசி பஸ் இயங்கி வந்த நிலையில், இரவு, 12:15 க்கு பொள்ளாச்சி, வால்பாறைக்கான கடைசி பஸ் இந்த பஸ் இனி இயங்கும். மறுநாள் மதியம், 12:30 மணிக்கு வால்பாறையில் புறப்பட்டு, பொள்ளாச்சி, திருப்பூர் வந்து, இரவு, 7:00 மணிக்கு சேலம் செல்லும். இந்த புதிய பஸ் சேவை மூலம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News