சிறுதானிய உணவுகளை சாப்பிட வேண்டும் அமைச்சர் அறிவுறுத்தல்
- போட்டிகளில் வெற்றி பெற்றமாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
- சர்க்கரை நோய், உடல் பருமன், ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி செயிண்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சீர்மிகு சிறுதானிய உணவு பெருவிழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி மற்றும் செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் சர்க்கரை நோய், உடல் பருமன்,ரத்த கொதிப்பு போன்ற நோய்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். இவை அதிகஆற்றலை தரக்கூடியவை. அரிசி, கோதுமை போன்ற மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது இவை புரதச்சத்து, நார்ச்சத்து மிகுந்துள்ளது.நீங்கள் கட்டாயம் சிறுதானிய உணவுகளை எடுத்து ஆரோக்கியமாக இருக்கவேண்டும். பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் ஒரு குடும்பம் ஆரோக்கியமாகஅமையும். அந்த வகையில் அனைவரும் சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொண்டுஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் (3-ம் மண்டலம்)கோவிந்தசாமி, (4-ம் மண்டலம்) இல.பத்மநாபன், மருத்துவர் சிவராமன், கிட்ஸ்கிளப் சேர்மன் மோகன்கார்த்திக், கல்லூரி செயலாளர்குழந்தை தெரசா, கல்லூரி முதல்வர் மேரிஜாஸ்பின், பள்ளி மாணவிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.