அல்லாளபுரம் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட பணியை அமைச்சர் ஆய்வு
- பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
- ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
திருப்பூர்:
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்மு.பெ.சாமிநாதன் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், திருப்பூர் மாவட்டம் பல்லடம்ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.
பல்லடம் ஊராட்சி ஒன்றியம், கரைப்புதூர்ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கணபதிபாளையம் வி.ஏ.டி.டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பார்க் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் விண்ணப்பம் பதிவு மையத்தினை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.40.90 லட்சம் மதிப்பீட்டில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் புதிய இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, திருப்பூர் சப்கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், பல்லடம் தாசில்தார்ஜெ ய்சிங் சிவக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.