உள்ளூர் செய்திகள்

நில உரிமை ஆவணங்களை (பட்டா) தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கிய காட்சி.

மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆவணம் அமைச்சர்கள் வழங்கினர்

Published On 2022-11-27 07:26 GMT   |   Update On 2022-11-27 07:26 GMT
  • மலைவாழ் கிராமங்களில் பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.
  • மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது.

உடுமலை :

மலைவாழ் மக்களுக்கு நில உரிமை ஆவணம் வழங்கும் நிகழ்ச்சி உடுமலை அருகே உள்ள குழிப்பட்டி செட்டில்மெண்டில் நடைபெற்றது. 389 மலைவாழ் மக்களின் விவசாய நிலங்களுக்கு நில உரிமை ஆவணங்களை (பட்டா) தமிழக செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது :- மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பல்வேறு நலத்திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மலைவாழ் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவ முகாம், நியாய விலைக்கடைகள், கல்வித்துறை உள்ளிட்ட பல துறைகள் மூலம் மலைவாழ் மக்களின் பிரச்சினைகள் தீா்க்கப்பட்டு வருகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் ஆதி திராவிட நலத் துறை அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது :- ஆதி திராவிடா்கள், பழங்குடியினரின் பொருளாதார நிலையை மேம்படுத்த தாட்கோ மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2005 வன உரிமை சட்டத்தின்படி விவசாய நிலங்களுக்கு வன உரிமை ஆவணம் வழங்கப்படுகிறது என்றாா்.விழாவில் மலைவாழ் மக்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் வினீத், பழங்குடியினா் நலத் துறை இயக்குநா் அண்ணாதுரை, மாவட்ட அலுவலா் ரவிசந்திரன், மடத்துக்குளம் முன்னாள் எம்.எல்.ஏ., இரா.ஜெயராமகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், தி.மு.க. நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News