உடுமலை நகராட்சியில் தூய்மைப்பணிக்கு நவீன எந்திரம்
- ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
- 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.
உடுமலை :
உடுமலை நகராட்சியில் தனியார் மற்றும் அரசு பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 80 லட்சம் செலவில் ரோடுகளை தூய்மைப்படுத்தும் வகையில் நவீன இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்தில் ரோடுகளில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மண் ஆகியவற்றை கீழே பொருத்தப்பட்டுள்ள பிரஸ் மற்றும் உறிஞ்சும் தன்மை உள்ள அமைப்பு வாயிலாக சேகரித்து உரக்குடில்களுக்கு கொண்டு வந்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்ய திட்டமிட்டுள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில் ,தனியார் நிறுவனங்கள் 50 சதவீதம் பங்களிப்பு நிதியுடன் "ரோடு ஸ்வீப்பிங்" எந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக 100 தொழிலாளர்கள் வாயிலாக மேற்கொள்ளும் பணியை ஒரு மணி நேரத்தில் முடிக்க முடியும்.
இரவு நேரங்களில் இந்த வாகனத்தை ரோடுகளில் இயக்கி தூய்மை பணி மேற்கொள்ளப்படுகிறது. மாநகராட்சிகளில் உள்ள இந்த வாகனம் முதல் முறையாக உடுமலை நகராட்சியில் பயன்படுத்தப்படுகிறது என கூறினர்.