உள்ளூர் செய்திகள்

முளைப்பாரி ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்கள். 

பல்லடம் அருகே கூப்பிடு பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி ஊர்வலம்

Published On 2023-03-25 10:50 GMT   |   Update On 2023-03-25 10:50 GMT
  • இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
  • புனித நீர் வழிபாடுடன் துவங்கி மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது.

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் கூப்பிடு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் இக்கோவில் புனரமைக்கப்பட்டு நாளை 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை 8 மணி அளவில் காரணம்பேட்டை வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து புனித தீர்த்த குடங்கள் எடுத்து வருதல், முளைப்பாரி ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சியுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். கேரள செண்டை மேளம், நாதஸ்வர மேளதாளத்துடன் ஊர்வலம் முக்கிய ரோடுகளின் வழியாக கூப்பிடு பிள்ளையார் கோவிலை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடுடன் துவங்கி இரவு 7:45 மணி அளவில் மூத்த பிள்ளையாருக்கு முதற்கால வேள்வியுடன் யாக பூஜைகள் துவங்கியது. அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கூப்பிடு பிள்ளையார் காவடிக் குழுவினரின் காவடியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

Tags:    

Similar News