வளர்ச்சி திட்டப்பணிகளை மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
- தங்கும் விடுதிகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
- பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன்படி திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் சாலை பணிகள், கட்டட பணிகள், மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகள், கழிவுநீர் கால்வாய் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் சீர்மிகு நகர திட்ட பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.
தொடர்ந்து இன்று மண்டலம் 4க்கு உட்பட்ட வார்டு 50, தென்னம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டு வரும் நகர்ப்புற நல வாழ்வு மையம், வார்டு 21 குமரன் பூங்கா மற்றும் வார்டு 43 ஆலங்காடு பகுதிகளில் செயல்பட்டு வரும் இரவு தங்கும் விடுதிகளை பார்வையிட்டு முறையாக பராமரிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் வார்டு 27 குமார் நகர் மற்றும் வார்டு 1 அங்கேரிபாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட்டார்.