உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆலோசனை

Published On 2023-06-29 07:21 GMT   |   Update On 2023-06-29 07:21 GMT
  • பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவும், நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
  • நடராஜ் தியேட்டர் அருகில் அமைய உள்ள புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி மைய அலுவலக வளாக கூட்டரங்கில் நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னைய்யா மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தலைமையில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நடைபெற்று வரும் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கவும், நடைபெற்று வரும் பணிகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

முன்னதாக சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சியில் ரூ.54.36கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மாநாட்டு அரங்கம், ரூ.31.18 கோடி மதிப்பீட்டில் புதியபேருந்து நிலையம் மேம்பாடு மற்றும் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நடராஜ் தியேட்டர் அருகில் அமைய உள்ள புதிய உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஆகியவற்றை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தலைமை பொறியாளர் வெங்கடேஷ், துணை ஆணையாளர்கள் பாலசுப்ரமணியன், சுல்தானா, துணை மாநகர பொறியாளர்கள் கண்ணன், வாசுகுமார், செல்வநாயகம், உதவி ஆணையாளர்கள் முருகேசன் வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News