பஸ்களில் கலைஞர் கருணாநிதி மத்திய பஸ் நிலையம் என பெயர் பலகை வைக்க வேண்டும் - 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் வலியுறுத்தல்
- பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது.
- வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் பேசியதாவது:- திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் பெயரை வைத்துள்ளோம். ஆனால் பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது. அதனைமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மண்டல தலைவர் நிதி தற்போது வழங்குவது போதுமானதாக இல்லை. எனவே வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கான்கிரீட் சாலை பழுதடைந்து உள்ளது .அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.
அதேபோல் நான்காவது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 11,459 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது .எனவே அந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும். நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 41, 51, 53 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது .எனவே விடுபட்டுள்ள அந்த பகுதிகளிலும் உடனடியாக பாதாள சாக்கடை பணியை தொடங்க வேண்டும் என்றார்.