சாமளாபுரத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
- பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை தொடங்கி வைத்தார்.
- நாட்டுநலப்பணி திட்ட முககமில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது.
மங்கலம்:
திருப்பூர் அடுத்த சாமளாபுரம் லிட்ரசி மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டுநலப்பணி திட்ட முகாம் நடந்தது. சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையம் பகுதியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமின் ஒரு பகுதியாக லிட்ரசி மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சாமளாபுரம் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து வேம்பு, பலா உள்பட 50 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
விழாவில் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகா பழனிச்சாமி கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் பள்ளியின் முதல்வர் ருக்மணி, வார்டு கவுன்சிலர்கள் மேனகா பாலசுப்பிரமணியம், பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தனபால், உதவி அலுவலர் வசந்த்குமார் , ஆசிரியை உண்ணாமலை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.