உள்ளூர் செய்திகள்

ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதை படத்தில் காணலாம்.

அலகுமலையில் நாளை ஜல்லிக்கட்டு அதிகாரிகள்-போலீசார் ஆய்வு

Published On 2023-04-24 06:38 GMT   |   Update On 2023-04-24 06:38 GMT
  • பெரும்பாலான பணிகள் முடிவுற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடம் தயார் நிலையில் உள்ளது.
  • போட்டி நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டு போட்டிக்கான ஏற்பாடுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) போட்டி நடைபெறுகிறது. இதற்காக பார்வையாளர்கள் அமரும் கேலரி, வாடிவாசல், போட்டியில் கலந்து கொண்ட பின் மாடுகளை பிடிப்பதற்கான இடம், கால்நடைகளை மருத்துவ பரிசோதனை செய்வதற்கான இடம், பார்வையாளர்கள் வந்தால் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் பகுதி உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான பணிகள் முடிவுற்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடம் தயார் நிலையில் உள்ளது.

போட்டி நடைபெறும் இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் மற்றும் மாவட்ட சப் -கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள 600 காளைகளும், 500 மாடு பிடி வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து இன்று இறுதிக்கட்ட பணிகள் முடிவுற்று போட்டிக்கான அனைத்து பணிகளையும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மேலும் போட்டி நடைபெறும் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News