செங்கப்பள்ளி ஸ்ரீ குமரன் மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வு தேர்வு
- ஸ்ரீகுமரன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
- 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வை மிக ஆர்வத்துடன் எழுதினர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான திறனாய்வுத் தேர்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீ குமரன் கல்விக் குழுமத்தின் தலைவர் மணி தலைமை தாங்கினார். ஸ்ரீகுமரன் கல்விக் குழுமத்தின் துணைத்தலைவர் கனிஷ்கா ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஸ்ரீகுமரன் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளி தேர்வில் கலந்து கொண்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை வரவேற்று பேசினார். இத்தேர்வில் ஊட்டி, கோத்தகிரி மற்றும் திருப்பூர் சுற்றுவட்டாரப் பள்ளிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு திறனாய்வு தேர்வை மிக ஆர்வத்துடன் எழுதினர்.
இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.10 ஆயிரம் 2 மாணவர்களுக்கும், 2-ம் பரிசாக தலா ரூ.7 ஆயிரத்து 500 மூன்று மாணவர்களுக்கும், 3-ம்பரிசாக தலா ரூ.5 ஆயிரம் 5 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. பரிசுத் தொகையை ஸ்ரீ குமரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ராமகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ குமரன் சீனியர் செகண்டரி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஜெயமுரளியும் வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தனர். முடிவில் தமிழாசிரியை தமிழரசி நன்றி கூறினார்.