அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
- ஆண்டிபாளையம் 60-வது வார்டு கண்ணன் காட்டேஜ் பகுதியில் சுமார் 250 வீட்டுக்கு மேல் உள்ளது.
- குப்பை தொட்டி இல்லாமல் மேலும் நோய்களும், கெட்ட துர்நாற்றமும் வருகிறது.
திருப்பூர்:
திருப்பூர் ஆண்டிபாளையம், கண்ணன் காட்டேஜ் 60-வது வார்டு பகுதி பொதுமக்கள் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஆண்டிபாளையம் 60-வது வார்டு கண்ணன் காட்டேஜ் பகுதியில் சுமார் 250 வீட்டுக்கு மேல் உள்ளது. நாங்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அடிப்படை வசதி இல்லை. சாக்கடை வசதி இல்லை.குடிநீரில் புழுக்கள் கலந்து வருகிறது. தெருவில் கொசுத் தொல்லைகளும் உள்ளது.அவரவர் வீட்டின் முன்பு குழி தோண்டி தண்ணீரை பெருக்க வேண்டிய சூழ்நிலைஉள்ளது. இந்த தண்ணீர் குழியில் பெருகி ரோடுகளில் செல்கிறது.குழந்தைகள் அதில் மிதித்து தான் நடக்க வேண்டியுள்ளது. இதனால் டெங்குகாய்ச்சல் அதிகமாக வருகிறது. சிக்கன்குனியா பெரியவர்களுக்கு வருகிறது.
மேலும் குப்பை தொட்டி இல்லாமல் மேலும் நோய்களும், கெட்ட துர்நாற்றமும் வருகிறது. மாநகராட்சிக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். மனுவும் கொடுத்துஉள்ளோம். எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து எங்களது பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.