உள்ளூர் செய்திகள்
பல்லடத்தில் தனியார் மதுபாரை மூட உத்தரவு
- அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்ப டுவதாக தி.மு.க.நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டு இருந்தார்.
- 90 நாட்களுக்கு அந்த மதுபான பார் செயல்பட தடைவிதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பல்லடம்:
பல்லடம் நால்ரோடு அருகே உள்ள தனியார் மதுபான பாரில், அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்ப டுவதாக தி.மு.க.நிர்வாகி ஒருவர் சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று மாவட்ட கலால் துறை உதவி இயக்குனர் ராம்குமார், கோட்ட கலால் அலுவலர் ராகவி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியா, போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர், அந்த மதுபான பாரில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் அந்த பார் செயல்பட்டு வந்ததாகவும், அதில் உறுப்பினர்களைத் தவிர வேறு நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து 90 நாட்களுக்கு அந்த மதுபான பார் செயல்பட தடைவிதித்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.