உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காங்கயம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு சீல்

Published On 2023-10-19 07:17 GMT   |   Update On 2023-10-19 07:17 GMT
  • அகஸ்தியலிங்கம்பாளையம், ஆலாம்பாடி, கீரனூா், பூமாண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
  • உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

காங்கயம்:

திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காங்கயம் காவல் துறையினா் அகஸ்தியலிங்கம்பாளையம், ஆலாம்பாடி, கீரனூா், பூமாண்டன்வலசு உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நெகிழிப் பைகள் விற்பனை செய்ததாக 10 கடைகளுக்கு 'சீல் வைத்ததுடன், ரூ.43 ஆயிரம் அபராதமும் விதித்தனா். மேலும், இதே போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் உணவு தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உரிமம் ரத்து செய்யப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

Tags:    

Similar News