பெதப்பம்பட்டி சாலையின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தீவிரம்
- இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.
- இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது.
உடுமலை:
மத்திய அரசின் 'பாரத் மாலா பிரயோஜனா' திட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் வரை நான்கு வழிச்சாலைஅமைக்கப்படுகிறது.
உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி செல்லும் சாலையில் குறிஞ்சேரி அருகே சாலையின் குறுக்கே நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த பணிகள் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் இரண்டு புறமும் தீவிரமாகநடந்து வருகிறது.இந்த நிலையில் பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே அமையும்நான்கு வழிச்சாலையின் இரண்டு புறங்களையும் இணைக்கும் வகையில்உயர்மட்டபாலம்கட்டும் பணிகள் தீவிரமாகநடந்து வருகிறது.இதில் தற்போது உயர் மட்டபாலத்தின் இருபுறங்களையும் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.இந்த பணிகளுக்காக அந்த இடத்திற்கு அருகில் வாகனங்கள் சென்று வருவதற்காக தற்காலிக பாதை விடப்பட்டுள்ளது. பஸ், லாரி, கார், வேன், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அந்த தற்காலிக பாதை வழியாக சென்று வருகின்றன.பெதப்பம்பட்டி செல்லும் சாலையின் குறுக்கே சாலையின் மேல்பகுதியில் நான்கு வழிச்சாலைக்கான உயர்மட்டபாலம் கட்டும் பணிகள் நிறைவடைந்நதும், அதன் கீழ்பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.