உள்ளூர் செய்திகள்

திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் ஆர்.நாகராஜ் எம்.எல்.ஏ., கே. என். விஜயகுமாரை சந்தித்து  கோரிக்கை மனு கொடுத்த காட்சி.

சாமுண்டிபுரம் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை- ம.தி.மு.க. கவுன்சிலர் கோரிக்கை

Published On 2023-06-22 10:54 GMT   |   Update On 2023-06-22 10:54 GMT
  • திருப்பூர் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிர்ஆர். நாகராஜ் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என். விஜயகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
  • தற்போது12 வகுப்பறை மட்டுமே உள்ளதால் கூடுதலாக 6 வகுப்பறை நபார்டு திட்டத்தின் மூலம் கட்டித் தர ஆவணம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளரும் 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர். நாகராஜ் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என். விஜயகுமாரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சாமுண்டிபுரம் ஈ.பி.காலனி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 700-க்கும் அதிகமான குழந்தைகள் பயின்று வருகின்றனர். ஆனால் தற்போது12 வகுப்பறை மட்டுமே உள்ளதால் கூடுதலாக 6 வகுப்பறை நபார்டு திட்டத்தின் மூலம் கட்டித் தர ஆவணம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன், தற்போது நடுநிலைப்பள்ளியாக உள்ளது. இதனை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தர பரிந்துரை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News