உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடத்திய மாணவர்கள். 

லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

Published On 2023-11-01 10:47 GMT   |   Update On 2023-11-01 10:47 GMT
  • றப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிலேகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை காவலர்கள் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்:

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2, திருப்பூர் தெற்கு காவல் நிலையம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை ஆகியவை இணைந்து திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் ஊழல் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்ற மையகருத்தை வலியுறுத்தி லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். தெற்கு காவல் உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் ஆய்வாளர் சசிலேகா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

காவல் ஆய்வாளர் பேசுகையில், சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு வாரம் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.லஞ்சம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கிறது. லஞ்சம் வாங்குவதும் கொடுப்பதும் குற்றம். பெருகி வரும் ஊழலை தடுக்க 0421-2482816, 8300046708 என்ற எண்களுக்கு தகவல் தர வேண்டும், அவ்வாறு தகவல் தருபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என்று பேசினார்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை காவலர்கள் ராஜா, வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு, மாணவ செயலர்கள் சுந்தரம், ராஜபிரபு, விஜய், தினேஷ் கண்ணன், செர்லின் ஆகியோர் தலைமையில் 60க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு நடனமாடியும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

Tags:    

Similar News